18 அக்., 2010

இந்திய ராணுவ தளபதிக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்,அக்.18:இந்தியாவின் பாதுகாப்பிற்கு சீனாவும், பாகிஸ்தானும் அச்சுறுத்தலாக விளங்குவதாக நேற்று முன் தினம் இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வி.கே.சிங்கின் அறிக்கை மிகவும் விவேகமற்றதும், போர் விருப்பம் நிறைந்ததுமாகும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

வி.கே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவை, பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் திமிர்த்தனமாக தலையிடுவதாகும் என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அப்துல் பாஷித் தெரிவித்துள்ளார்.

சிங்கின் அறிக்கையை நாங்கள் மிகுந்த கவனத்தோடு பார்க்கிறோம். தெற்காசியாவில் சமாதானமும், பாதுகாப்பும் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு சிங்கின் அறிக்கை பலன் தராது.

கஷ்மீர் உள்ளிட்ட மோதல் சூழல் நிலவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பலன் தரக்கூடிய பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார். ஆனால், 'அணுஆயுத போர் வருவதற்கான வாய்ப்பு' உள்ளிட்ட வார்த்தை பிரயோகங்கள் இந்தியாவின் போர் ஆர்வத்தை சுட்டிக்காட்டுவதாக அப்துல் பாஷித் தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்திய ராணுவ தளபதிக்கு பாகிஸ்தான் கண்டனம்"

கருத்துரையிடுக