டெல்லி,அக்.25:என்கவுண்டர் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தெரிவிக்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்கவுண்டர் சம்பவம் நடந்தால் அது குறித்து தகவல் தெரிவிப்பதற்கான புதிய விதிமுறைகளை தேசிய மனித உரிமை ஆணையம் வகுத்து வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் புதிய விதிமுறைகளை ஆணையம் அனுப்பியுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, என்கவுன்டர் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குள் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த என்கவுன்டர் சம்பந்தமான 2-வது அறிக்கையை போலீஸார் அடுத்த 3 மாதங்களுக்குள் அனுப்ப வேண்டியது கட்டாயம்.
2-வது அறிக்கையில் என்கவுன்ட்டரில் பலியானவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, மரண விசாரணை அறிக்கை, மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணை அறிக்கை, மூத்த போலீஸ் அதிகாரிகளின் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
பழைய விதிகளின்படி என்கவுன்ட்டர் சம்பவம் நடந்த 6 மாதங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தகவல் தெரிவித்தால் போதும்.
பழைய விதிமுறைகளின்படி என்கவுன்ட்டர் சம்பவ அறிக்கையை மாநில டிஜிபிக்கள்தான் அனுப்பவேண்டும்.
ஆனால் புதிய விதிகளின்படி மாவட்ட மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் அல்லது போலீஸ் கண்காணிப்பாளர் அனுப்பினாலே போதுமானது.
பழைய விதிகளின்படி போலீஸôருக்கு எதிராக எழுப்பப்படும் என்கவுன்ட்டர் வழக்குகளை குற்றப்பிரிவு போலீஸார் மட்டுமே விசாரிக்கலாம்.
ஆனால் புதிய விதிகளின்படி சிறப்பு விசாரணை ஏஜென்சிகள் இந்த வழக்குகளை விசாரிக்கலாம். சிபிசிஐடி அல்லது ஏதாவது ஒரு சிறப்பு விசாரணை அமைப்பு இந்த வழக்குகளில் விசாரணை நடத்தலாம் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: on "என்கவுன்ட்டர்:48 மணி நேரத்திற்குள் தகவலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் புதிய நிபந்தனை"
கருத்துரையிடுக