25 அக்., 2010

ஆ;ப்கானிஸ்தானில் போதைமருந்து வியாபாரம்: எச்சரிக்கையை அமெரிக்கா புறக்கணித்ததாக ரஷ்யா குற்றச்சாட்டு

காபூல்,அக்.25:ஆப்கானிஸ்தானில் போதைமருந்து பரிசோதனைக் கூடங்கள் குறித்து முறையான தகவல் அளித்த பிறகும் கூட அமெரிக்கா அதனை புறக்கணித்துவிட்டதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஹெராயினை சுத்திகரிக்கும் 175க்கும் மேற்பட்ட பரிசோதனைக் கூடங்கள் குறித்து காபூலில் அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக ரஷ்யாவின் ஃபெடரல் ட்ரக் கண்ட்ரோல் ஏஜன்சியின் தலைவர் விக்டர் இவனோவ் தெரிவிக்கிறார். ஆனால், குறித்த நேரத்தில் இத்தகவலைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் அவற்றை அழிக்க முடியவில்லை என அவர் தெரிவிக்கிறார்.

போதைப் பொருள் தயாரிக்கப்படும் பகுதிகளில் யுத்தப் பிரபுக்களின் பெயர்களை தடைக்காக ஐ.நாவிடம் ஒப்படைத்து அவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும் என இவனோவ் கோரியுள்ளார்.

போதைப் பொருளை கட்டுப்படுத்த அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றிணைந்து உருவாக்கிய கமிஷனின் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக வாஷிங்டனுக்கு வருகைத் தந்த இவனோவ் இதனை தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் போதைப் பொருளை அழிக்க அமெரிக்காவும், நேட்டோவும் முயற்சி மேற்கொள்ளாததால் ரஷ்யாவிற்கு பெரிய அளவில் போதைப் பொருள் வருவதாக இவனோவ் குற்றஞ்சாட்டுகிறார். அதேவேளையில் போதைப் பொருள் தயாரிப்பை முற்றிலும் ஒழித்தால் போதைப் பொருளை தரும் பயிர்களை பயிரிடும் விவசாயிகள் தாலிபான்களுடன் சேர்ந்துவிடுவர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாலிபான்களின் ஆட்சிக் காலத்தில் போதைப் பொருள் பயிர்களின் விவசாயம் பெருமளவில் குறைந்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு துவங்கிய பிறகுதான் ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் உற்பத்தி பெருகியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆ;ப்கானிஸ்தானில் போதைமருந்து வியாபாரம்: எச்சரிக்கையை அமெரிக்கா புறக்கணித்ததாக ரஷ்யா குற்றச்சாட்டு"

கருத்துரையிடுக