25 அக்., 2010

பாகிஸ்தான் உறவு இந்தியாவுக்கு தோஷமல்ல - அமெரிக்கா

வாஷிங்டன்,அக்.25:பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு இந்தியாவுக்கு தோஷமல்ல என அமெரிக்கா கூறியுள்ளது.

229 கோடி டாலர் உதவித் தொகையை தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ளதற்கு இந்தியா கவலைத் தெரிவித்திருந்தது. இச்சூழலில்தான் அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளைச் சார்ந்த உயர் அதிகாரிகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் இத்தகைய கவலைகள் எழுவது வழக்கமாகும். ஆனால், இரு நாடுகளும் இவ்விவகாரத்தில் கவலைக் கொள்ளத் தேவையில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.க்ரவ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான அமெரிக்க உறவு பாகிஸ்தானின் செலவிலோ அல்லது பாகிஸ்தானுடனான உறவு இந்தியாவின் செலவிலோ அல்ல என க்ரவ்லி கூறுகிறார்.

முன்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ராபர்ட் கேட்ஸ் ஆகியோருடன் நடந்த சந்திப்பின்போது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கெ.அந்தோணி, அமெரிக்காவின் நிதியுதவியை பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவதாக புகார் கூறியிருந்தார். ஆனால், இதனை புறக்கணித்துக் கொண்டுதான் நேற்று முன் தினம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 229 கோடி டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது.

அதேவேளையில், அமெரிக்காவின் நிதியுதவியை பாகிஸ்தான் இந்தியாவிற்கெதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதிச்செய்ய அமெரிக்கா ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த க்ரவ்லி, எல்லா நாடுகளும் சுதந்திர இறையாண்மைக் கொண்ட நாடுகள் என்றும், நிதியுதவி ராணுவப் பயிற்சிக்கும், பயங்கரவாத எதிர்ப்பு போருக்கும் பயன்படும் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தான் உறவு இந்தியாவுக்கு தோஷமல்ல - அமெரிக்கா"

கருத்துரையிடுக