ஸ்ரீநகர்,அக்.25:ஜம்மு-கஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருபகுதியாக இருக்கவில்லை என பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் கூறியுள்ளார்.
கஷ்மீர் பிரச்சனைத் தொடர்பான கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர். கஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியல்ல என்பது வரலாற்று ரீதியான உண்மை. இந்திய அரசுக்கூட இதனை அங்கீகரித்துள்ளது.
பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைத்தவுடன் இந்தியா காலனி ஆதிக்க சக்தியாக மாறிவிட்டது. வடகிழக்கு பகுதிகளில் எதிர்ப்பு குரலை உயர்த்துபவர்களை அடக்கி ஒடுக்க இந்தியா கஷ்மீரிகளை ராணுவத்திலும், துணை ராணுவப் படையிலும் சேர்த்து வருகிறது. கஷ்மீரை இந்தியாவோடு இணைத்துக் கூறுவதைக் குறித்து நேற்று முன்தினம் அருந்ததிராய் கேள்வியெழுப்பியிருந்தார்.
கருத்தரங்கில் நவ்லாகா, ஆஷிம் ராய், பர்வேஷ் புஹாரி, சஞ்சய் கக் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை: அருந்ததிராய்"
கருத்துரையிடுக