25 அக்., 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு:குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உபதேசம் வழங்கியவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் இந்திரேஷ்குமார்

புதுடெல்லி,அக்,25:அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய ரகசியக் கூட்டத்தில் குற்றவாளிகளிடம், போலீசில் சிக்காமலிருக்க பல்வேறு ஹிந்துத்துவா அமைப்புகளில் உறுப்பினராக சேர உபதேசம் வழங்கியுள்ளார் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் இந்திரேஷ்குமார்.

இதனை ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது: ரகசியக் கூட்டத்தில் பெரும்பாலும் உரை நிகழ்த்தியது இந்திரேஷ் குமார் ஆவார். இந்திரேஷ்குமார், பிரக்யாசிங் தாக்கூர், சுனில் ஜோஷி, ராம் சந்திரா என்ற ராம்ஜி கல்சாங்கரா, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே, தேவேந்திர குப்தா ஆகியோர் ஜெய்பூரில் குஜராத் சமாஜம் விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசியக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் பிரக்யாசிங் மலேகான் குண்டுவெடிப்பில் குற்றவாளியாவார். சுனில்ஜோஷி மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜோஷி மனோஜ் என்ற பெயரில் விருந்தினர் மாளிகையில் அறை புக் செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடத்துவது தொடர்பான முக்கிய பொறுப்பு ஜோஷியிடம் இக்கூட்டத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களும், வெடிப் பொருட்களும் சேகரிப்பதும், குண்டுவெடிப்பு நடத்தவேண்டிய இடத்தை நிச்சயிப்பதும் சர்மாவிடமும், கல்சாங்கராவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி சிம் கார்டுகள் வாங்குவதற்கான பொறுப்பு குப்தாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பிற்கு பிறகு ஊடகங்களை கையாள்வதற்கான பொறுப்பு பிரக்யாசிங் தாக்கூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 11-13 தேதிகளில் குண்டுவெடிப்பு நடத்த வேண்டிய இடத்தை இவர்கள் மத்திய குஜராத்தில் காங் பகுதியில் அமைந்துள்ள சுவாமி அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் நடந்த கூட்டத்தில் நிச்சயிக்கின்றார்கள்.

டெல்லி ஜும்ஆ மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய இடங்களை குறிவைக்கும் பட்டியலை இவர்கள் தயாரித்திருக்கின்றார்கள்.

இந்தூரில் சாந்திவிஹார் என்ற காலனியில் உள்ள கல்சாங்கராவின் வீட்டில் வைத்து வெடிக்குண்டுகள் தயாரிக்கப்பட்டன. இரண்டு வெடிக்குண்டுகளை கல்சாங்கரா, ஜோஷி, டாங்கே ஆகியோர் இணைந்து வைத்துள்ளனர். இதில் ஒரு குண்டுதான் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றுபேரும் தலைமறைவாகினர்.

ஜெய்பூரில் பல்வேறு முஸ்லிம் பகுதிகளில் குண்டுவெடிப்பு நடத்தவும் இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புடனும் இவர்களுடைய தொடர்பைக் குறித்து குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பிரக்யாசிங் தாக்கூர், கர்னல் புரோகித் ஆகியோருடன் ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவிற்கு நெருங்கிய தொடர்பிருந்ததை 806 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 133 சாட்சிகளின் பட்டியலும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உபதேசம் வழங்கியவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் இந்திரேஷ்குமார்"

கருத்துரையிடுக