புதுடெல்லி,அக்.25:கஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான் என மத்திய அரசால் கஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நியமிக்கப்பட்ட பத்திரிகையாளர் திலீப் பட்கோங்கரின் தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானை உட்படுத்தாமல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது சாத்தியமில்லை என நடுவர்குழு கூறியுள்ளது.
பிரச்சனைகளுக்கு பரிகாரம் காண்பதற்காக ஸ்ரீநகர் சென்று இறங்கியவுடன் நடுவர் குழுவினர் ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சியின் நிலைப்பாட்டையொத்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
கஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்ற தற்போதைய கருத்திற்கு எதிரானதாகும் இந்த நிலைப்பாடு. தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானியின் புறக்கணிப்பு அழைப்பு நிலவும் சூழலில், பனிப்பொழிவு துவங்கியுள்ள ஸ்ரீநகருக்கு மத்திய நடுவர் குழு வெள்ளிக்கிழமை சென்றடைந்தது.
ஆனால்,கஷ்மீரிகளிடமிருந்து குளிர்ச்சியான பதில்தான் அவர்களுக்கு கிடைத்தது. ஸ்ரீநகரில் மத்திய சிறையில் தீவிரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்ட கைதிகளுடன் மத்திய நடுவர் குழு உரையாடியது.
பாகிஸ்தான் வரை பரவியுள்ளதுதான் கஷ்மீர் பிரச்சனை என்பதை எவராலும் மறுக்கமுடியாது என மத்திய நடுவர்குழு உறுதிப்படக் கூறியது.
பாகிஸ்தானை உட்படுத்தாமல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் எனக் கூறுவது அபத்தமாகும். 60 வருடகால பழமையான சிக்கலான விவகாரம்தான் கஷ்மீர். இதற்கு அரசியல் ரீதியான தீர்வுதான் தேவை.
பாகிஸ்தானுடனும், சுதந்திரத்தைக் கோரும் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் நான் காணும் ஒரே வழி. கஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் பேச்சுவார்த்தை நடத்துவதற்குதான் பிரதமரும், அவருடைய அமைச்சரவையும் விரும்புகிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெளிவுப்படுத்தியுள்ளார் என மத்திய நடுவர் குழுவின் தலைவரான பத்திரிகையாளர் திலீப் பட்கோங்கர் தெரிவிக்கிறார்.
தற்போதைய மத்தியஸ்த முயற்சிகள் நகைக்கத்தக்கது என ஹூர்ரியத் உள்ளிட்ட அமைப்புகளின் நிலைப்பாடுக் குறித்து கேள்வி எழும்பிய பொழுது, அவர்களுக்கு அவர்களுடைய கருத்தை தெரிவிப்பதற்கான சுதந்திரம் உள்ளது என திலீப் பட்கோங்கர் தெரிவித்தார். தேவையில்லாமல் இங்குவந்து திரும்பி போவது அல்ல எங்களுடைய நோக்கம். கஷ்மீர் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய அபிப்ராயங்களை ஆராய்வோம்.
கல்வீச்சில் ஈடுபடும் இளைஞர்களை சந்திப்பதற்குத்தான் நான் முக்கியத்துவம் அளிக்கிறேன். ஏனெனில், அவர்கள், தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்த குண்டுவீசவோ,துப்பாக்கிய பிரயோகிக்கவோ செய்யவில்லையே அதனால்தான்.கற்களை பரிமாறுவதற்கு பதிலாக கொள்கைகளை பரிமாற அவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம். அவர்களின் பல்வேறு அபிப்ராயங்களை மதிப்பதற்கு தயாராகவேண்டும். அவர்கள் உணர்ச்சி கொந்தளிப்பிலும், கோபத்திலும் உள்ளனர். அவர்களை காணமுடியவில்லை என நடிப்பதற்கு முடியாது.
ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி முன்வைத்த ஐந்து அம்ச கோரிக்கைகளைக் குறித்து கேள்வி எழும்பிய பொழுது, எல்லா விஷயங்களையும் பேசுவதற்கு நாங்கள் தயார் என பட்கோங்கர் தெரிவித்தார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கிடையில் கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்க வேண்டும், பாகிஸ்தானுடன் இணைய வேண்டும், இந்தியாவுடன் இணைய வேண்டும் உள்ளிட்ட முழக்கங்கள் கஷ்மீரிலிருந்து எழுந்துள்ளன. எல்லா காரியங்களைக் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என பட்கோங்கர் தெரிவித்தார்.
பி.டி.பி தலைவர் முஸஃபர் ஹுசைன் பேக், பிரபல அறிஞர் ஆகா அஷ்ரஃப் அலி ஆகியோருடனும் மத்திய நடுவர்குழு சந்தித்து பேசியது. எல்லா மாதங்களும் 10 தினங்கள் கஷ்மீரில் தங்கி அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிப்போம் எனவும், தங்களின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த உயர்மட்டத்திலிருந்து உறுதி வழங்கப்பட்டுள்ளது எனவும் பட்கோங்கர் தெரிவித்தார்.
எம்.எம்.அன்சாரி, ராதாகுமார் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள நடுவர் குழுவின் இதர உறுப்பினர்களாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி:மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நடுவர் குழு"
கருத்துரையிடுக