4 அக்., 2010

ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு வசம் உள்ள 67 ஏக்கர் நிலத்தையும் தர வேண்டும் - கல்யாண்சிங்

லக்னோ,அக்.4:அயோத்தியில் பிரமாண்ட அளவில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு வசம் உள்ள 67 ஏக்கர் நிலத்தையும் தர வேண்டும் என்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும்போது உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங். லக்னோவில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கோரினார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தையொட்டி மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ள 67 ஏக்கர் நிலத்தைப் பொருத்தவரை எந்த சர்ச்சையும் இல்லை.

எனவே அந்த நிலத்தை ராமர் கோயிலை பிரம்மாண்டமான முறையில் கட்டுவதற்கு தர வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன் என்றார் அவர்.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் 2.7 ஏக்கர் நிலத்தை மூன்று பங்காகப் பிரித்து அதில் ஒரு பங்கு ராமர் கோயிலுக்கு என்றால் அந்த நிலம் ராமர் கோயில் எழுப்புவதற்கு போதாது. எனவே மத்திய அரசு வசம் உள்ள நிலமும் அளிக்கப்பட வேண்டும் என்றார்.

சர்ச்சைக்குரிய இடத்தில் மூன்றில் ஒரு பங்குதான் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒதுக்கப்படும் நிலை உள்ளது. அதில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமர் கோயில் கட்டுவது என்பது இயலாது.

இதுவரை அப்படியொரு இருந்ததில்லை என்ற அளவில் பிரம்மாண்ட கோயில் கட்டுவதற்கு தேவையான அளவு நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்றார் அவர். மத்திய அரசு வசம் உள்ள நிலத்தை அப்படியே ராமர் கோயிலுக்கு அளித்துவிடுவதில் சிக்கல் ஏதுமில்லை. பிரம்மாண்ட கோயில் கட்டினால் அது சர்வதேச சுற்றுலா மையமாக திகழும். அதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானமும் கிடைக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இது தொடர்பாக பேச உள்ளேன். 67 ஏக்கரை ஒதுக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்குமாறு அவர்களிடம் கோர உள்ளேன் என்றார் அவர்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது மத்திய அரசு மற்றும் மாயாவதி அரசின் பொறுப்பு. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று முதல்வர் மாயாவதி கூறியுள்ளார். உண்மையில் மாயாவதி அரசுககும் தீர்ப்பை நிறைவேற்றும் பொறுப்பு உள்ளது.

ராமர் கோயில் கட்டுவதற்கு நிலம் கொடுப்பதன் மூலம் காங்கிரஸ் இதற்கு முன் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். என்றார் கல்யாண் சிங்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு வசம் உள்ள 67 ஏக்கர் நிலத்தையும் தர வேண்டும் - கல்யாண்சிங்"

Unknown சொன்னது…

Nan pirantha hospital lai enakku thiruppi thara vendum........nanum manu thakkal seyya pogindren......

கருத்துரையிடுக