18 அக்., 2010

அணுசக்தி நிலையங்களை தாக்கும் வைரஸ் - ஈரான் தோல்வியுறச் செய்தது

பெய்ரூத்,அக்.18:ஈரானின் அணுசக்தி நிலையங்களிலுள்ள கம்ப்யூட்டர்களில் வைரஸை நுழைத்து அதன் கட்டமைப்பை தகர்க்க திட்டமிட்ட மொஸாத் மற்றும் சி.ஐ.ஏவின் முயற்சியை ஈரானின் தொழில்நுட்ப வல்லுநர்கள் உரிய நேரத்தில் செயலிழக்க வைத்தனர்.

ஸ்டக்ஸ்நைட் என்ற மிகவும் சிக்கலான வைரஸை உருவாக்கிய பிறகு அதனை USB மூலம் நதான்ஸ் மற்றும் புஷெஹ்ர் ஆகிய இடங்களிலிலுள்ள யுரேனியம் ப்ளாண்டுகளில் செறிவூட்டலை தடுப்பதுதான் இவ்விரு அமைப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டன.

அதீத பாதுகாப்பு நிறைந்த நேரடியான சர்வர்களுடன் தொடர்புக்கொள்ள முடியாததால் பென் ட்ரைவ் பயன்படுத்தப்பட்டது.

மைக்ரோசாஃப்ட் விண்டோசில் காணப்படும் துளைகள் மூலமாக நுழைந்து ஈரானின் பயன்படுத்தும் கம்யூட்டர்களில் மட்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஸ்டக்ஸ்நைட் வைரஸ் முயன்றதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேப்போன்ற உபகரணங்களைக் கொண்ட இதர ஸ்தாபனங்களையும் வைரஸ் பாதித்தாலும் அது பிரச்சனைகளை உருவாக்கவில்லை.

ஜெர்மனியில் சீமன்ஸ் நிறுவனம்தான் ஈரானில் யுரேனியம் செறிவூட்டுவதற்கான செண்ட்ரிஃப்யூஜிகளை வழங்கியுள்ளது. ஆதலால், வைரஸ் சீமன்ஸின் இயந்திரங்களை குறிவைத்தது.

புஷெஹ்ரில் சில கம்ப்யூட்டர்களில் வைரஸ் நுழைந்த பொழுதிலும் ஈரானின் தொழில்நுட்ப வல்லுநர்கள் உரிய நேரத்தில் கண்டிபிடித்ததால் இழப்புகள் தவிர்க்கப்பட்டதாக ஈரானின் செய்தித் தொடர்பாளர்கள் கூறுகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணுசக்தி நிலையங்களை தாக்கும் வைரஸ் - ஈரான் தோல்வியுறச் செய்தது"

கருத்துரையிடுக