30 அக்., 2010

ஓரினச்சேர்க்கையாளர்களை அரசு வேலைகளில் நியமித்த ஒபாமா

வாஷிங்டன்,அக்.30:150க்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களை அரசுப் பணிகளில் நியமனம் வழங்கி உத்தரவிட்டுள்ளார் ஒபாமா.

பல்வேறு ஏஜன்சிகளின் தலைவர்களாகவும், கமிஷன் உறுப்பினர்களாகவும் இவர்களை ஒபாமா நியமித்துள்ளார். இதனை ஓரினச்சேர்க்கையாளர்களே தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் இரண்டு கட்ட ஆட்சியின் போது 140 ஓரினச்சேர்க்கையாளர்கள் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ராணுவ பணிகளில் ஓரினச்சேர்க்கையாளர்களை சேர்ப்பதற்கான தடையை அரசு சமீபத்தில் நீக்கியிருந்தது. சான்ஃபிரான்சிஸ்கோவில் நகர வீட்டு வசதி வாரியத்தின் துணைச் செயலாளராக ஓரினச்சேர்க்கையாளரான ரோபர்ட்டா அக்டன்பர்கினை 1993 ஆம் ஆண்டு கிளிண்டன் நியமித்திருந்தார்.

உயர் பதவியை வகிக்கும் முதல் ஓரினச்சேர்க்கையாளர் அக்டன்பர்க் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதிகமான ஓரினச்சேர்க்கையாளர்களை அரசுப் பணிகளில் நியமித்த பெருமை அதிபர் ஒபாமாவையே சாரும் என ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் கோல் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஓரினச்சேர்க்கையாளர்களை அரசு வேலைகளில் நியமித்த ஒபாமா"

கருத்துரையிடுக