30 அக்., 2010

விக்கிலீக்ஸ்:அமெரிக்கா விசாரிக்க வேண்டும் - வளைகுடா ஒருங்கிணைப்பு கவுன்சில் வலியுறுத்தல்

ரியாத்,அக்.30:ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய அட்டூழியங்கள் தொடர்பாக ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியிருக்கும் வேளையில், அதனைக் குறித்து அமெரிக்கா விசாரிக்க வேண்டும் என வளைகுடா ஒருங்கிணைப்பு கவுன்சில்(G.C.C) வலியுறுத்தியுள்ளது.

மனிதத் தன்மையற்ற அக்கிரமங்கள் ஈராக்கில் நடந்துள்ளதாக ஆவணங்கள் தெளிவுப்படுத்துகின்றன. இச்சம்பவத்தின் முக்கியத்துவத்தை கணக்கில் கொண்டு விரிவான விசாரணைக்கு அமெரிக்கா தயாராகவேண்டும் என ஜி.சி.சியின் பொதுச் செயலாளர் அப்துற்றஹ்மான் அல் அத்திய்யா தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் ராணுவம் நடத்திய குற்றங்களின் முழுப் பொறுப்பும் அமெரிக்காவையே சாரும் என அத்திய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

2004-09 காலக்கட்டங்களில் ஈராக்கில் அப்பாவி மக்களுக்கெதிராக நடந்த அக்கிரமங்கள் அடங்கிய நான்கு லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஈராக் ராணுவம் சிறைக்கைதிகளை கொடூரமாக சித்திரவதைச் செய்த தகவல் கிடைத்த பிறகும் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அந்த ரகசிய ஆவணங்கள் கூறுகின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:அமெரிக்கா விசாரிக்க வேண்டும் - வளைகுடா ஒருங்கிணைப்பு கவுன்சில் வலியுறுத்தல்"

கருத்துரையிடுக