30 அக்., 2010

வரதட்சணைக்காக கொலை:மரணத் தண்டனை வழங்க வேண்டும் -உச்சநீதிமன்றம்

புதுடெல்லி,அக்.30:வரதட்சணைக்காக மணமகளைக் கொலைச் செய்யும் குற்றத்திற்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இத்தகைய மரணங்கள் அபூர்வமானவற்றில் அபூர்வமானதாகும் என உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. மணப்பெண் கொலைக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய காலம் கடந்துவிட்டது என நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜும், ஞான் சுதா மிஷ்ராவும் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது.

மனைவியை மூச்சுத்திணறச் செய்து கொலைச் செய்தபிறகு உடலை எரித்த வழக்கில் உத்தரபிரதேசத்தைச் சார்ந்த சத்திய நாராயணன் திவாரியையும், அவருடைய தாயாரையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை அங்கீகரித்துக் கொண்டுதான் உச்சநீதிமன்றம் இக்கருத்தினை வெளியிட்டது. செசன்ஸ் நீதிமன்றம் திவாரியையும், அவருடைய தாயாரையும் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்ததை எதிர்த்து மேல்முறையீடுச் செய்தவழக்கில் உயர்நீதிமன்றம் அதனை ரத்துச்செய்து ஆயுள்தண்டனை வழங்கியது.

பெண்களுடனான மதிப்புதான் ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாகும். இந்திய சமூகம் நோய்பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. இதனை நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வரும் வழக்கிலிருந்து புரிந்துக்கொள்ள முடிகிறது. பயங்கரமான முறையில் ஒரு பெண்ணைக் கொலைச்செய்யும் சமூகத்தின் நிலை எத்தகையது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்திய சமூகம் முற்றிலும் வியாபார மயமாகிவிட்டது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வரதட்சணைக்காக கொலை:மரணத் தண்டனை வழங்க வேண்டும் -உச்சநீதிமன்றம்"

கருத்துரையிடுக