அலகாபாத்,அக்.30:கஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய்க்கு ஆதரவாக பா.ஜ.கவின் ராஜ்யசபை உறுப்பினர் ராம்ஜெத்மலானி கருத்துத் தெரிவித்துள்ளார்.
கஷ்மீர் விவகாரத்தில் சமீபத்தில் அருந்ததிராய் கூறிய கருத்துக்களைக் குறித்து பத்திரிகையாளர்கள் ராம்ஜெத்மலானியிடம் கேள்வி எழுப்பிய வேளையில் அவர் பதிலளிக்கையில் அருந்ததிராய் கஷ்மீர் குறித்து கூறிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் இல்லையெனினும், அவருக்கு கருத்து சுதந்திரம் உண்டு எனக் கூறினார்.
கஷ்மீர் விவகாரத்திற்கு பரிகாரம் காண்பதற்கு பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நடுவர்குழு தலைவர் திலீப் பட்கோங்கர் கூறிய கருத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது பா.ஜ.க.
இவ்விவகாரத்தில் பா.ஜ.கவை விமர்சித்த ராம் ஜெத்மலானி, நேற்று அருந்ததிராய்க்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள நடுவர்கள் கஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்குகின்றனர் என்ற பா.ஜ.கவின் குற்றச்சாட்டு குழந்தைத் தனமானதும், கண்ணியம் இல்லாததுமாகும் என ராம்ஜெத்மலானி கூறியிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அருந்ததிராய்க்கு கருத்து சுதந்திரம் உண்டு: ராம்ஜெத்மலானி"
கருத்துரையிடுக