30 அக்., 2010

கான்பூரில் குண்டுவெடிப்பு:நான்கு பேர் மரணம்

கான்பூர்,அக்.30:உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் மரணமடைந்தனர். குண்டுவெடிப்பில் இரண்டு மாடிக்கட்டிடம் முற்றிலும் தகர்ந்துவிட்டன.

கான்பூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்யாண்பூரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் கட்டிடத்தில்தான் நேற்று மதியம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கிய எட்டு குழந்தைகள் நான்கு பெண்கள் உள்பட 12 பேரை அதிகாரிகள் காப்பாற்றினர். பெண் உள்ளிட்ட நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

குண்டுவெடிப்பிற்கு தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமல்ல என போலீஸ் கூறுகிறது. கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த சக்தி மிகுந்த பட்டாசுகள் குண்டுவெடிப்பிற்கு காரணமாக இருக்கலாம் என கான்பூர் டி.ஐ.ஜி பிரேம்பிரகாஷ் அறிவித்துள்ளார்.

தகர்ந்த கட்டிட சிதிலங்களுக்கிடையிலிருந்து பட்டாசு துகள்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் உறுதிச் செய்துள்ளது. சம்பவத்தைக் குறித்து தீவிரவாத எதிர்ப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்து மாஜிஸ்ட்ரேட் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கான்பூரில் குண்டுவெடிப்பு:நான்கு பேர் மரணம்"

கருத்துரையிடுக