இஸ்லாமாபாத்,நவ.6:வடமேற்கு பாகிஸ்தானில் மஸ்ஜித் ஒன்றில் குண்டுவெடித்ததில் 71 பேர் மரணமடைந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தர்ரா ஆதம்கேலில் ஜும்ஆ தொழுகையின்போது இந்த அக்கிரமமான தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. மஸ்ஜிதின் மேற்கூரை முற்றிலும் தகர்ந்துவிட்டது. மரண எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தாக்குதலின் பொறுப்பை எவரும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்பகுதி பாக்.தாலிபானின் சக்திவாய்ந்த மையமாகும். பெஷாவரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அகுர்வால் கிராமத்தில்தான் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மஸ்ஜிதின் ஒரு சுவர் மட்டுமே பாக்கியிருந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை முடித்துவிட்டு இறங்கும் வேளையில் உடலில் வெடிக்குண்டை கட்டிய நபர் மஸ்ஜிதின் மையப்பகுதியில் குண்டை வெடிக்கச்செய்துள்ளான். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் உடல்கள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஏராளமான குழந்தைகளும் அடங்குவர் என பெஷாவர் லேடி லீடிங் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உள்ளூர் பழங்குடி தலைவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது எனவும் கூறப்படுகிறது. தாலிபான்களுக்கெதிராக மக்களை திரட்டியவர் இவர் எனக் கூறப்படுகிறது. ஆனால், இச்சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது உறுதிச் செய்யப்படவில்லை.
கடந்த மாதம் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஆன்மீக மையத்தில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டிருந்தனர். கராச்சியில் நடந்த இதைப் போன்ற தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாகிஸ்தான்:மஸ்ஜிதில் குண்டுவெடித்து 71 பேர் மரணம்"
கருத்துரையிடுக