6 நவ., 2010

கியூபா மற்றும் பாகிஸ்தானில் விமான விபத்து- 89 பேர் மரணம்

ஹவானா/கராச்சி,நவ.6:கியூபாவிலும், பாகிஸ்தானிலும் நடந்த விமான விபத்துக்களில் 89 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்திலிருந்து கிளம்பிய தனியார் சார்ட்டர் விமானம் தகர்ந்து வீழ்ந்து 21 பயணிகள் மரணித்தனர். ஒரு அமெரிக்க எண்ணை நிறுவனத்தின் 19 பணியாளர்களும், 2 விமானப் பணியாளர்களும் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர். இந்த சிறிய விமானம் பறக்கத் துவங்கியவுடனேயே தகர்ந்து கீழே விழுந்துவிட்டது.

நேற்று காலை 7.15 மணிக்கு விமானம் பறக்கத் துவங்கியவுடனேயே விமானத்தின் எஞ்சின் பழுதடைந்துள்ளதாக விமானி ஏர் ட்ராஃபிக் கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் அனுப்பியுள்ளார். விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு கண்ட்ரூல் ரூம் பைலட் உத்தரவிட்டார். ஆனால், உடனடியாகவே விமானம் தகர்ந்து வீழ்ந்துவிட்டது. கீழேவிழுந்த விமானம் தீப்பற்றியதால் எவரும் உயிர் தப்பவில்லை. இறந்த உடல்களை அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவை கருகியிருந்தன.

கராச்சியின் அருகிலுள்ள எண்ணை வயலுக்கு பணியாளர்களை அழைத்துச்செல்லும் வேளையில்தான் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

கியூபாவின் சாண்டியாகோ டி கியூபாவிலிருந்து ஹவானாவிற்கு சென்ற விமானம் உள்ளூர் நேரம் காலை 5.42 மணிக்கு தகர்ந்து வீழ்ந்தது. இவ்விமானத்தில் 28 பயணிகள் வெளிநாட்டினராவர்.

கண்ட்ரோல் ரூமுடைய தொடர்பு துண்டிக்கப்பட்டவுடனேயே இவ்விமானம் தகர்ந்து வீழ்ந்துள்ளது. இவ்விபத்தில் 68 பேர் கொல்லப்பட்டனர். விபத்தில் பயணிகள் எவரும் தப்பியதாக தகவலில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கியூபா மற்றும் பாகிஸ்தானில் விமான விபத்து- 89 பேர் மரணம்"

கருத்துரையிடுக