6 நவ., 2010

அமெரிக்க சிறையில் வாடும் மகனுக்கு நீதி வேண்டும் - ஒபாமாவுக்கு அணு விஞ்ஞானி கோரிக்கை

மும்பை,நவ.6:அமெரிக்க சிறையிலடைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு சட்டரீதியான உதவி தேவை என அணு விஞ்ஞானி கோட்டா சுப்ரமணியம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக்கில் அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் அமெரிக்காவை பழிவாங்குவோம் என இணையதள அரட்டைகளில் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோட்டா சுப்ரமணியத்தின் மகன் விக்ரமை அமெரிக்க அதிகாரிகள் சிறையிலடைத்தனர்.

ஈராக்கில் கொல்லப்பட்ட 3,12,769 பெண்கள் மற்றும் குழந்தைகளின் மரணத்திற்கு பழிவாங்க வேண்டும் என இணையதள அரட்டை அறைகளில் தென்பட்ட அழைப்புகளின் பின்னணியில் விக்ரம் செயல்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்தனர்.

விக்ரம் அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தவர். ஒபாமாவை சந்திக்க மூன்று நிமிடங்கள் ஒதுக்கவேண்டும் என கோரி இந்திய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கோட்டா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க சிறையில் வாடும் மகனுக்கு நீதி வேண்டும் - ஒபாமாவுக்கு அணு விஞ்ஞானி கோரிக்கை"

கருத்துரையிடுக