அஹ்மதாபாத்,டிச.7:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது நரோதாகாமில் நடந்த கூட்டுப் படுகொலையில் பங்கேற்ற குற்றவாளிகளின் குரல்களுடைய மாதிரியை சேகரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு குஜராத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
குற்றவாளிகளுக்கெதிரான குரல் மற்றும் காட்சிகளின் ஆதாரங்களுடன் இவர்களின் குரல் மாதிரிகள் ஒப்பீடுச் செய்யப்படும்.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான பாபு பஜ்ரங்கி, ஜய்தீப் பட்டேல் ஆகியோரின் குரல் மாதிரிகளை சேகரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றம் தடுத்த சூழலில் அதனைக் குறித்து கேள்வியெழுப்பி எஸ்.ஐ.டி புகாரை பரிசீலனைக்கு எடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2002 ஆம் ஆண்டு நரோதாகாமில் 11 பேரை கொடூரமாக கூட்டுப் படுகொலைச் செய்த சம்பவத்தில் இருவருக்கும் பங்குண்டு என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் குரல் மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்திய குற்றவியல் நடவடிக்கையின்படி சட்டமில்லை எனக்கூறி கலவர வழக்குகளை விசாரித்துவரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹெச்.ஓரா கடந்த மார்சி மாதம் எஸ்.ஐ.டியின் கோரிக்கை மனுவை தள்ளுபடிச் செய்திருந்தார்.
பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட குற்றவாளிகள் எவ்வாறு தாக்குதல்களை நடத்தினர், அவர்களுக்கு போலீசாரும், அரசியல் தலைவர்களும் உதவி அளித்ததைக் குறித்தும் டெஹல்கா பத்திரிகை நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் விளக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.டியின் கைவசமுள்ள டெஹல்கா டேப்புகள் உள்ளிட்டவற்றில் குரலும், குற்றவாளிகளின் குரலும் ஒப்பிட்டுப் பார்க்கத்தான் எஸ்.ஐ.டி சிறப்பு விசாரணை நீதிமன்றத்தை அணுகியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "குஜராத் இனப்படுகொலை:குரல் மாதிரிகள் சேகரிக்க எஸ்.ஐ.டிக்கு அனுமதி"
கருத்துரையிடுக