10 டிச., 2010

குவைத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல்

குவைத் சிட்டி,டிச.10:குவைத் நாட்டில் சுலைப்கட்டில் எதிர் கட்சியினர் நடத்திய பேரணியை போலீசார் தடுக்க முயன்றதில் ஏற்பட்ட மோதலில் 5 எம்.பிக்கள் உட்பட ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலீசாரின் லாத்திசார்ஜில்தான் இவர்களுக்கு காயமேற்பட்டது. மக்கள் கூட்டத்தை கலைத்துவிட போலீசார் முயன்றதை தடுக்க முயன்றபொழுது போலீசார் லாத்திசார்ஜ் நடத்தினர்.

காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நூற்றுக்கணக்கான கார்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பல மணிநேரங்கள் பாதிப்பிற்குள்ளானது.

1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அரசு சூழ்ச்சிச் செய்வதாக கூறித்தான் எதிர் கட்சியினர் பேரணிக்கும் பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடுச் செய்தனர். இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க பிரதமர் ஷேக் நஸீர் முஹம்மது அல் அஹ்மத் அல் ஸபாஹில் அழுத்தம் கொடுப்பார் என எம்.பிக்கள் அறிவித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குவைத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல்"

கருத்துரையிடுக