குவஹாத்தி,டிச.15:மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பைத் தாக்குதலில் மர்மமான முறையில் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னால் தனக்கு தீவிர ஹிந்துத்துவா சக்திகளிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்தார் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கர்காரேயுடன் தான் நடத்திய தொலைபேசி உரையாடலுக்கான ஆவணம் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் தெரிவித்ததாவது: "கர்காரேயுடன் நான் தொலைபேசியில் உரையாடியதைக் குறித்து பொய்க்கூற எனக்கு தேவையில்லை. தொலைபேசி உரையாடல்களின் ஆவணங்களுக்காக நான் போபால் பி.எஸ்.என்.எல் பொது மேலாளரை அணுகியபொழுது, அவர் 12 மாதங்களுக்கு மேலாக எந்த தொலைபேசி உரையாடல்களையும் பாதுகாப்பதில்லை என தெரிவித்தார்.
போபாலில் எனது தொலைபேசி எண்ணிலிருந்துதான் நான் கர்காரேயுடன் உரையாடினேன். கர்காரே என்னுடன் பேசினார் என நான் வெளியிட்ட அறிக்கையில் தற்பொழுதும் உறுதியாக இருக்கிறேன்." இவ்வாறு திக்விஜய்சிங் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கர்காரேயுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் ஆவணம் கிடைக்கவில்லை - திக் விஜய் சிங்"
கருத்துரையிடுக