5 டிச., 2010

ஓ எங்கள் பாப்ரி! நீ வீர மறவர்களின் சுவாசம்!

ஓ எங்கள் பாப்ரி! நீ வீர மறவர்களின் சுவாசம்! ஆண்டுகள் தோறும் ஆறுகள் வரும்போது
ஆறாத ரணமாக எமது உள்ளம்!
இடித்தது என்னவோ பாப்ரிதான்!
நொடிந்து போனது எங்கள் இதயங்களல்லவா?

அடையாள கரசேவைக்கு
அயோக்கியர்களின் அகராதி
கடப்பாறை சேவை என்றது!

புரிந்துக்கொள்ளாத உச்சநீதிமன்றத்தை
தெரிந்தே துச்சமாக்கினர் துரோகிகள்

வீதிகள் தோறும் குருதியின் வாசனை
நாதியற்ற முஸ்லிம் தலைமை
பீதியில் உறைந்தது எம் சமூகம்!

காத்திருந்த நீதி
கதவை சாத்தியது
காவியின் கரங்களில்
நீதியின் சாவிகள் அடைக்கலம் தேடின

கறுப்பு அங்கிக்குள் ஒரு
கருவறுப்பு கச்சிதமாக அரங்கேறியது!
கொலைக்கார கும்பலுக்கு
கலைமாமணி பட்டம்!

இனி அமைதிப் புறாக்கள்
போருக்குத்தான் தூது செல்லும்!

நம்பிக்கையின் மிச்ச மீதி
உச்சநீதிமன்றத்தில்
ஆறுதல் கொள்வதா?
அல்லது ஆத்திரமடைவதா?

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க
விலை போனவர்கள் சிலர்
வலை வீசுகின்றனர்

ஆனாலும்
ஓ!எங்கள் பாப்ரியே!
நாங்கள் சக்திப் பெறுவோம்!
விரக்தியை கருவறுப்போம்!
யுக்தியை வரையறுப்போம்!
உனை ஒருநாள் மீட்டெடுப்போம்!

உனது வீழ்ச்சியை
எங்களது எழுச்சியால்
வென்றெடுப்போம்!

உன் மீது படிந்துபோன நஜீஸுகளை
அகற்றிவிட்டு
சுஜூது செய்வோம் ஒருநாள்!

ஓ எங்கள் பாப்ரி!
நீ வீணர்களின் கோஷம் அல்ல!
வீரமறவர்களின் சுவாசம்!

நாங்கள் நேற்று முளைத்த காளான்களல்ல!
களைத்துப் போக!
நாற்றுக்களை நட்டுவிட்டோம்!
இனி கழனியில்
களைபிடுங்கும் வேலைதான் மிச்சம்!

-ஆயிஷாமைந்தன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "ஓ எங்கள் பாப்ரி! நீ வீர மறவர்களின் சுவாசம்!"

SAHEED சொன்னது…

ஆனாலும்
ஓ!எங்கள் பாப்ரியே!
நாங்கள் சக்திப் பெறுவோம்!
விரக்தியை கருவறுப்போம்!
யுக்தியை வரையறுப்போம்!
உனை ஒருநாள் மீட்டெடுப்போம்!..............
TRUE LINES............

கருத்துரையிடுக