மும்பை,டிச.9:வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்று பின்னர் விடுவித்தனர்.
குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்பதாகக் கூறி 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பியதுத் தொடர்பான விசாரணைக்காக இவர்களை அழைத்துச் சென்றதாக மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சீவம் தயாள் தெரிவித்தார்.
நவி மும்பையில் வாஷியில் ரெஸிடென்சியல் காம்ப்ளக்சிலிருந்து வைஃபே இண்டெர்நெட் வழியாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வெடிக்குண்டு நடந்த சூழலில் உ.பியில் முன்னெச்சரிக்கை தொடர்கிறது.
மிதிலேஷ் தக்கர் என்பவரின் வைஃபே இணையதள தொடர்பை ஹேக்செய்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக உ.பி கூடுதல் டி.ஜி.பி பிரிஜ்லால் தெரிவிக்கிறார். ரிமோட் கண்ட்ரோலோ, சர்க்யூட்டுகளோ வெடிக்குண்டு நடைப்பெற்ற இடத்திலிருந்து கண்டறியப்படவில்லை. ஆணிகள், சில்லுகள் ஆகியன வெடிப்பொருட்களுடன் காணப்படவில்லை. ஏதேனும் அமைப்பிற்கு தொடர்புண்டா என்பதுக் குறித்து கூறவியலாது என பிரிஜ்லால் தெரிவித்தார்.
யார் மின்னஞ்சல் செய்தியை அனுப்பினார் என்பதை கண்டறிவதற்கான விசாரணை நடந்துவந்தாலும், இம்மின்னஞ்சல் ஒரு ஜிமெயில் முகவரியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
நவி மும்பையைச் சார்ந்தவரையும் அவரது மகனையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்ததாக மும்பை போலீஸ் கூறுகிறது.
கோயில் நகரம் என்று அழைக்கப்படும் வாரணாசியில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் ஒரு பெண்குழந்தை கொல்லப்பட்டது. 37 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் ஐந்து பக்கங்களைக் கொண்ட மின்னஞ்சல் ஊடகங்களுக்கு கிடைத்தது. நவி மும்பையில் போலீஸ் பரிசோதனையை தொடர்ந்து நடத்திவருகிறது என போலீஸ் கமிஷனட் தெரிவித்துள்ளார். அதேவேளையில் குண்டுவெடிப்பின் சிதிலங்களை சோதனைக்காக ஆக்ரா பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய பொருட்களைக் குறித்தும், குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களைக் குறித்தும் தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவு செயலாளர் யு.கெ.பன்ஸால் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஏதேனும் அமைப்பிற்கு தொடர்புண்டா? என்பதுக் குறித்து கூறவியலாது. மின்னஞ்சல் வேறு நாடுகளிலிருந்து நவி மும்பை வழியாக அனுப்பப்பட்டதா? என்பதுக் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. விசாரணையை என்.ஐ.ஏயிடம் ஒப்படைக்க தற்பொழுது உத்தேசமில்லை எனவும் பன்சால் தெரிவித்தார்.
வெடிக்குண்டு நடந்த இடத்தில் கிடைத்த சி.சி.டி.வி வீடியோ காட்சிகளை போலீஸ் பரிசோதித்து வருகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "வாரணாசி குண்டுவெடிப்பு:விசாரணை தொடர்கிறது"
கருத்துரையிடுக