"எங்களது முக்கிய நோக்கம் இணையதளத்தின் ஆசிரியர் குழு நிதி உதவியாளர்களின் தலையீடின்றி சுதந்திரமாக செயல்படவேண்டும் என்பதே" எனக் கூறுகிறார் ஆன் இஸ்லாம் இணையதளத்தை உருவாக்கியுள்ள ஊடக மேம்பாட்டிற்கான எம்.டி.எ அறக்கட்டளையின் தலைவர் ஹிஷாம் கஃபார்.
இஸ்லாம் ஆன்லைன் இணையதளத்திற்கு புதியதாக கத்தர் நாட்டைச் சார்ந்த காமையாத் அல் பலாக் என்ற கலாச்சார அமைப்பு நிதி உதவியாளர்களாக பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இவ்வமைப்பிற்கு கெய்ரோவிலிருந்து செயல்பட்டுவந்த இஸ்லாம் ஆன்லைனின் ஆசிரியர் குழுவிற்கும் மோதல் வெடித்தது.
இஸ்லாம் ஆன்லைனின் பழைய நிதி ஆதரவாளர்கள் ஆசிரியர் குழுவின் சுதந்திரத்தில் தலையிட்டதில்லை. மேலும் கடந்த 1999 முதல் துவங்கிய இஸ்லாம் ஆன்லைன் இணையதளத்திற்கு பிரபல மார்க்க அறிஞர் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவியின் ஆதரவும் கிடைத்தது. ஆனால், புதிய நிதி உதவியாளர்கள் பொறுப்பேற்றபோது ஆசிரியர் குழுவின் சுதந்திரத்தில் தலையிட ஆரம்பித்தது. இதனால் பிரச்சனைகள் உருவாகின.
இந்நிலையில் இஸ்லாம் ஆன்லைன் இணைய தளத்தை உருவாக்கிய ஆசிரியர் குழுவினரால் ஆன் இஸ்லாம் என்ற இணையதளம் வெற்றிகரமாக செயல்படத் துவங்கியுள்ளது. இஸ்லாத்தை நடுநிலையான சிந்தனையுடன் பரப்பிவந்த மேலும் முஸ்லிம்களின் பிரச்சனைகளைக் குறித்து விவாதித்த இஸ்லாம் ஆன்லைன் இணையதளத்தின் சித்தாந்தம் புதிய இணையதளமாக ஆன் இஸ்லாம் என்ற பெயரில் செயல்படத் துவங்கியுள்ளது பாராட்டத்தக்கது.
இஸ்லாத்திற்காகவும், முஸ்லிம்களுக்காகவும் புதிய இணையதளம் சேவை புரியட்டும் என நாமும் வாழ்த்துவோம்.
0 கருத்துகள்: on "இஸ்லாம் ஆன்லைன் இணையதளத்திற்கு மாற்றாக புதிய இணையதளம்"
கருத்துரையிடுக