11 டிச., 2010

வருண் காந்தியை விசாரணைச்செய்ய அனுமதி

லக்னோ,டிச.11:கடந்த மக்களவை தேர்தலின் போது தேர்தல் பிரச்சார வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிலிபித் எம்.பியும் பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவருமான வருண் காந்தியை விசாரணைச்செய்ய உ.பி.அரசு அனுமதி அளித்துள்ளது.

பிலிபித் மாவட்டத்தில் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வருணின் மீது போலீசார் வழக்கு பதிவுச் செய்திருந்தனர்.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஜனநாயக சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் வருண் காந்தியை விசாரிக்க அனுமதியளித்ததாக உ.பி. மாநில உள்துறை செயலாளர் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரிவினர்களுக்கிடையே பகை உணர்வை வளர்த்துதல், மத உணர்வுகளை காயப்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை சுமத்தி வருண்காந்தி மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

மொஹல்லா பால்சந்திலும், பர்கேரா பட்டிணத்திலும் மார்ச் ஏழு, எட்டு ஆகிய தேதிகளில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் பேரணியின்போது வருண் காந்தி முஸ்லிம்களைக் குறித்து மோசமாக பேசினார். இரண்டு உரைகளையும் கவனத்தில் கொண்ட தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரபிரதேச முக்கிய தேர்தல் அதிகாரிகளுக்கும், மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிற்கும் உத்தரவு போட்டது.

இரண்டு வழக்குகள் வருண்காந்தியின் மீது பதிவுச் செய்யப்பட்டது. வழக்குத் தொடர்பாக வருண் காந்தி கைதுச் செய்யப்பட்டிருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வருண் காந்தியை விசாரணைச்செய்ய அனுமதி"

கருத்துரையிடுக