7 ஜன., 2011

விக்கிலீக்ஸ்:காஸ்ஸாவில் துயர நிலையை தொடர்ந்து நீடிக்கச் செய்ய இஸ்ரேல் திட்டம்

டெல்அவீவ்,ஜன:கடுமையான தடைகளின் காரணமாக துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸாவின் பொருளாதார நிலைமையை அழிவின் விழும்பில் நிறுத்துவோம் என இஸ்ரேல் கடந்த 2008 ஆம் ஆண்டு கூறியதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காஸ்ஸாவில் 13 லட்சம் ஃபலஸ்தீன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச அளவில் இப்பிரச்சனை கவனத்தை ஈர்க்காத வகையில் காஸ்ஸாவின் பொருளாதார நிலையை மிகவும் படுபாதாளத்திற்கு கொண்டுசெல்வதுதான் இஸ்ரேலின் திட்டம் என அமெரிக்க தூதரக செய்திகள் கூறுகின்றன.

2008 ஜனவரியில் அன்றைய பிரதமர் யஹூத் ஓல்மர்ட் ஆற்றிய உரையில் இதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார்.

இதனடிப்படையில் காஸ்ஸாவில் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களையும், மருந்துகளையும்தான் இஸ்ரேல் கொண்டுசெல்ல அனுமதியளித்துள்ளது.

இஸ்ரேலின் தடையினால் காஸ்ஸா ஒரு சிறைச்சாலைப் போன்று ஆகிவிட்டது என மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. 35 சதவீதம் பேருக்கு காஸ்ஸாவில் வேலைவாய்ப்பு இல்லை. உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை இது.

விக்கிலீக்ஸ் கசியச்செய்த இரண்டரை லட்சம் கேபிள் செய்திகளும் தங்களிடம் வசமுள்ளது எனவும், வரும் நாட்களில் இதனை
வெளிப்படுத்துவோம் என இச்செய்தியை வெளியிட்ட நார்வே நாட்டு பத்திரிகையான அஃப்டன் போஸ்டன் தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:காஸ்ஸாவில் துயர நிலையை தொடர்ந்து நீடிக்கச் செய்ய இஸ்ரேல் திட்டம்"

கருத்துரையிடுக