6 ஜன., 2011

விக்கிலீக்ஸ்:பல அரபு உயரதிகாரிகள் சிஐஏவின் ஒற்றர்கள்

கெய்ரோ,ஜன.6:விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸன்ஜே அல்ஜஸீராவுக்கு அளித்த பேட்டியில்,அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கு சார்பாக அரபுலகின் உயரதிகாரிகள் தங்கள் அரசாங்கத்தின் பணிகளை உளவு பார்க்கின்றனர் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் தங்கள் நிறுவனத்திடம் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த அதிகாரிகள் அமெரிக்காவுக்காக தங்கள் நாடுகளில் உளவு பார்க்கின்றனர் என்று கூறிய அஸன்ஜே சித்திரவதைக்காக அமெரிக்கா,
குற்றம் சாட்டப்பட்டவர்களை சில நாடுகளுக்கு அனுப்புவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தகவல்களும் தங்களிடம் உள்ளதாக கூறுகிறார்.

இந்த நேர்காணலின் போது அஸன்ஜே தன்னிடம் இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆவணங்களை அதிகாரிகளின் பெயர் குறிப்பிடாமல் காண்பித்ததாகவும், அவர் பேச்சிலிருந்து எகிப்தே இந்த செயலில் ஈடுபடுவதாக தெரிகிறது என்று அல்ஜஸீராவின் அஹமத் மன்சூர் உறுதிபடுத்துகிறார்.

பெயர்களை சொல்லுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. பெயர் குறிப்பிடாமல் ஆவணங்களின் சில பகுதிகளை வெளியிடுவதால் மட்டுமே எங்கள் நிறுவனத்தை பாதுகாத்துக்கொள்ள முடிகிறது என்றார் அஸன்ஜே.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விக்கிலீக்ஸ்:பல அரபு உயரதிகாரிகள் சிஐஏவின் ஒற்றர்கள்"

கருத்துரையிடுக