8 ஜன., 2011

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் கலாமுக்கு சாப்பாடு தருவதில் அலட்சியம்

மதுரை,ஜன.6:முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மதுரையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது, அவருக்கு சாப்பாடுவது தருவதில் அலட்சியமும், தாமதமமும் காட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அப்துல் கலாம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோதும், வீட்டோடு முடங்காமல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மாணவர்களுடன் உரையாடுவது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று ஒரு இளைஞரைப் போல உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறார். அதேசமயம், அவருக்கு ஆங்காங்கே சிற்சில அவமதிப்புகளும் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

முன்பு அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவர் ஷூவைக் கழற்றச் சொல்லி அவமதித்தனர். கேரளாவில் பயணம் செய்தபோது அவருடன் வர வேண்டிய டாக்டர் வராமலேயே அவர் பயணிக்க நேரிட்டது.

இந்த நிலையில், மதுரையில் அவருக்கு சாப்பாடு தருவதில் அலட்சியமும், கவனக் குறைவும் காட்டப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அப்துல் கலாமுக்கு, காலை 7 மணிக்கு உணவு தரப்பட வேண்டும் என்று உதவியாளர்கள் நேற்றிரவே சொல்லியிருந்தனர்.

அதன்படி, இன்று காலை 7 மணிக்கு உணவு உண்ணச் சென்றார் அப்துல்கலாம். ஆனால் உணவு தரப்படவில்லை. சரி என்று கிளம்பிச் சென்ற கலாம் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்துள்ளார். அப்போதும் உணவு தரப்படவில்லை. இப்படி மூன்று முறை வந்து போயிருக்கிறார் கலாம்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாக 7.50 மணிக்குத்தான் சாப்பாடு வந்திருக்கிறது. இதனால் அவரது பயணமும் தாமதமாகியுள்ளது. அதன் பின்னர் அவர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கோவா கடற்கரையில் ஓய்வாக அமர்ந்திருந்ததை படம் பிடித்ததை பெரிய குற்றச் செயலாக பிரச்சினை எழுப்பி, புகைப்படம் எடுத்தவர்களை காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று விசாரணை நடத்தி உலுக்கி எடுத்துள்ளனர். ஆனால் இந்திய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள கலாமுக்கு சாப்பாடு தருவதில் இவ்வளவு கால தாமதம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் கலாமுக்கு சாப்பாடு தருவதில் அலட்சியம்"

கருத்துரையிடுக