10 ஜன., 2011

பொதுமன்னிப்பு:சவூதி இந்திய தூதரகத்தில் அலைமோதும் கூட்டம்

ரியாத்,ஜன.10:பொதுமன்னிப்பின் கால அவகாசம் முடிவதற்குள் 'அவுட் பாஸ்' பெறுவதற்காக சவூதியில் இந்திய தூதரகத்தில் இந்தியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

தினமும் 1000 அவுட் பாஸ் வழங்கப்பட்டு வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஹஜ், உம்ரா மற்றும் சுற்றுலா விசாக்களில் சவூதிக்கு வருகைத் தந்தவர்கள் விசா காலாவதி ஆனபிறகும் தங்களது நாட்டிற்கு திரும்பாமல் தங்கியிருப்பவர்கள், வேலைவாய்ப்பு உள்பட இதர விசா காலாவதியான பிறகும் சவூதியில் தங்கியிருப்பவர்கள் ஆகியோருக்கு கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் வருகிற மார்ச் மாதம் 25-ஆம் தேதி வரை தங்களது நாட்டிற்கு எவ்வித தண்டனையும் இல்லமல் திரும்பிச் செல்வதற்கான பொதுமன்னிப்பை சவுதி அரசு அறிவித்திருந்தது.

இந்தியாவிலிருந்து 2.5 லட்சம் பேர் சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளதாக கருதப்படுகிறது. இவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல இது நல்லதொரு வாய்ப்பாகும். இந்திய தூதரகத்தில் கூட்டம் காரணமாக தூதரக பணீயாளர்களிடம் கூடுதலாக 6 மணிநேரம் வேலைச் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய தூதரக அதிகாரி தெரிவிக்கிறார்.

பொதுமன்னிப்பு ஹுரூப்(ஸ்பான்சரை ஏமாற்றிவிட்டு தலைமறைவானவர்)களுக்கு பொருந்தாது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பொதுமன்னிப்பு:சவூதி இந்திய தூதரகத்தில் அலைமோதும் கூட்டம்"

கருத்துரையிடுக