டெல்அவீவ்,ஜன.10:ஃபலஸ்தீனின் கிழக்கு ஜெருசலத்தில் புதிய 20 யூதர்களுக்கான வீடுகளை கட்டுவதற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹோட்டலை இஸ்ரேல் அதிகாரிகள் புல்டோசரால் இடித்துத் தள்ளியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு புல்டோசர்களை பயன்படுத்தி ஷெப்பர்ட் ஹோட்டல் இடித்துத் தள்ளப்பட்டது. அல் அக்ஸா மஸ்ஜிதுக்கு அருகில் ஷேக் ஜர்ரா, அல் ஜோஸ் ஆகிய அரபு பிரதேசங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இந்த ஹோட்டல்.
அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி அல்குத்ஸ் முஃப்தி ஹஜ் அமீன் அல் ஹுஸைனியின் சொந்த இடத்தில்தான் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. ஹுஸைனி கடந்த 1937 ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் நாடு கடத்தப்பட்டார். 1974 ஆம் ஆண்டு அவர் லெபனானில் வைத்து மரணமடைந்தார். 1967 ஆம் ஆண்டு இந்த ஹோட்டலை ஆக்கிரமித்த இஸ்ரேல் ஒரு யூத கோடீஷ்வரனுக்கு விற்றது.
இஸ்ரேலின் இத்தகைய அத்துமீறல்கள் தொடரும் வேளையில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடக்காது என ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸஈப் எரகாத் தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு மட்டும் கிழக்கு ஜெருசலத்தில் 40 ஃபலஸ்தீனர்களின் வீடுகளையும், 90 கடைகளையும் இஸ்ரேல் தகர்த்துள்ளது. எதிர்கால ஃபலஸ்தீன் நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலத்தை விரும்பும் ஃபலஸ்தீனர்களை அங்கிருந்து முற்றிலும் அகற்றுவதுதான் இஸ்ரேலின் நோக்கம் எனக் கருதப்படுகிறது.
கிழக்கு ஜெருசலமில் வசிக்கும் இரண்டரை லட்சம் ஃபலஸ்தீனர்களும் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் சூழலில் உள்ளதாக சமீபத்தில் வெளியான ஐ.நாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஜெருசலமில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹோட்டலை இடித்துத் தள்ளியது இஸ்ரேல்"
கருத்துரையிடுக