10 ஜன., 2011

எகிப்து:சர்ச் குண்டுவெடிப்பில் கைதான நபரை அடித்துக் கொன்ற போலீசார்

கெய்ரோ,ஜன.10:புதுவருட கொண்டாட்டத்தின் போது எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் அமைந்துள்ள காப்டிக் சர்ச்சில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தொடர்பாக 32 வயதான முஹம்மது செய்யத் பிலால் கைதுச் செய்யப்பட்டிருந்தார். கைதை பதிவுச் செய்த உடனேயே இவருடைய இறந்த உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பிலாலை விசாரணையின் வேளையில் போலீசார் அடித்துக் கொலைச் செய்துள்ளதாக பிலாலில் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனைக் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தைக் குறித்து பதிலளிக்க எகிப்து நாட்டின் உள்துறை அமைச்சர் மறுத்துவிட்டார். ஆனால், இறந்த உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் கோரியுள்ளார்.

பிலாலின் உடலில் சித்திரவதைச் செய்யப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக வெளிநாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறைக்கைதிகள் மீது எகிப்திய போலீசார் கட்டவிழ்த்துவிடும் கொடுமைகளைக் குறித்து ஏற்கனவே மனித உரிமை அமைப்புகள் விமர்சிக்கின்றன.

சர்ச் தாக்குதல் தொடர்பாக இதுவரை 17 நபர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:சர்ச் குண்டுவெடிப்பில் கைதான நபரை அடித்துக் கொன்ற போலீசார்"

கருத்துரையிடுக