13 ஜன., 2011

மத அவமதிப்புச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு பாகிஸ்தானுக்கு போப் அழைப்பு

வாடிகன்சிட்டி,ஜன.13:இறைத்தூதர் முகம்மது நபியை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் மதஅவமதிப்புச் சட்டத்தை பாகிஸ்தான் இரத்துச்செய்ய வேண்டுமென போப் பதினாறாம் பெனடிக் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுபான்மை மதக்குழுக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் அநீதிகளுக்கும் இச்சட்டம் ஓர் போர்வையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாடிகனில் நிகழ்த்திய புதுவருட உரையின்போதே இதனைத் தெரிவித்துள்ள போப்; இந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுப்பதை அனைத்துத் தலைவர்களும் மீண்டும் பலமுறை ஊக்குவிக்க வேண்டும்.

பஞ்சாப் மாகாண ஆளுநரின் படுகொலை இந்தச் செயல்முறைகளில் முன்னேற்றம் ஏற்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எகிப்து மற்றும் ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களையும் கண்டித்துள்ள போப் சிறுபான்மை மதக் குழுக்களைப் பாதுகாப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதை வெளிக்காட்ட வேண்டிய அவசியத்தேவை இங்குள்ள அரசாங்கங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மத சுதந்திரம் தொடர்பில் இதுவரை போப்பால் வெளிப்படுத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றென செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முஹமது நபியை அவமதித்த குற்றச்சாட்டில் கிறிஸ்தவப் பெண்ணொருவருக்கு கடந்த நவம்பரில் மரணதண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் மதஅவமதிப்புச் சட்டம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:பிபிசி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மத அவமதிப்புச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு பாகிஸ்தானுக்கு போப் அழைப்பு"

கருத்துரையிடுக