இஸ்லாமாபாத்,ஜன.13:மத அவமதிப்புச் செயல்களில் ஈடுபட்ட இமாம் ஒருவருக்கும், அவருடைய மகனுக்கும் பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது.
முஸாஃபர்கர் மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றிய முஹம்மது ஷாஃபி மற்றும் அவருடைய மகன் அஸ்லம் ஆகியோரை கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைதுச் செய்தனர்.
இவர்களுடைய கடைக்கு வெளியே ஒட்டிய போஸ்டரை கிழித்து தரையில் போட்டு மிதித்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்களிருவரும் மத அவமதிப்புச் சட்டத்தின்படி குற்றவாளிகள் என பஞ்சாப் தேராகாஸி கான் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த சட்டத்தை விமர்சித்ததற்காக கடந்த வாரம் பஞ்சாப் மாகாண கவர்னர் ஸல்மான் தஸீர் அவரது மெய்க்காப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இத்தீர்ப்பிற்கு எதிராக லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்வோம் என எதிர்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மத அவமதிப்பு:இமாமுக்கும் மகனுக்கும் ஆயுள்தண்டனை"
கருத்துரையிடுக