9 ஜன., 2011

தீவிரவாதத்தை தூண்டும் நிறுவனங்களைக் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி

புதுடெல்லி,ஜன.9:தீவிரவாதிகளை உருவாக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் குறித்து கவனமாக விசாரணையை நடத்தவேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொயில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் காரணம் என ஹிந்துத்துவ பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலத்திலிருந்து தெரியவந்த சூழலில் வீரப்ப மொயில் இதனை தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு பயிற்சி அளிக்கும் சில நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுவது தெளிவாகியுள்ளது. அவர் தனி நபர்களை தீவிரவாதிகளாகவும், கடைசியில் மனித வெடிக்குண்டுகளாகவும் மாற்றுகின்றனர்.

இந்தியாவில் தீவிரவாதம் உருவாகி பரவலாகியுள்ளதுத் தொடர்பான பிரச்சனையாகும் இது. சக மனிதர்களுடன் கருணையும், அன்பும் வளரச் செய்யும் விதமான தகவல்களை பாடத் திட்டங்களில் உட்படுத்த வேண்டும் என தெரிவித்த வீரப்ப மொயிலியிடம், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சுவாமி அஸிமானந்தா குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததைக் குறித்து கேட்டபொழுது சி.பி.ஐயின் விசாரணையின் வெளிச்சத்தில் வெளியான தகவல் இது எனவும், விசாரணையில் குறுக்கிட தான் விரும்பவில்லை எனவும் மொய்லி தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதம் என்றோ, ஹிந்து தீவிரவாதம் என்றோ விளக்கமளிக்க இயலாது எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தீவிரவாதத்தை தூண்டும் நிறுவனங்களைக் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி"

கருத்துரையிடுக