துபாய்,ஜன.6:அத்தியாவசியப் பொருட்களின் விலை யு.ஏ.இயில் அதிகரிக்கிறது. பால், சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மொத்த விற்பனையாளர்களின் கோரிக்கையை யு.ஏ.இயின் பொருளாதார அமைச்சகம் அங்கீரித்துவிட்டதாக அல்கலீஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் உயர்மட்டக் கமிட்டி விலையை தீர்மானிப்பதற்கான முடிவை எடுத்துள்ளது.
சீனி, முட்டை, பால், கோழி, மசாலப் பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும்.
நுகர்வோருக்கு அதிக சுமையை ஏற்படுத்தாத வகையில் இவ்விலை உயர்வு அமையும். அதேவேளையில் குளிர்பானங்களுக்கு 50 சதவீதம் வரை விலைகூடும். டாலரின் மதிப்பு குறைந்துள்ளதால் விலை கூடுவதாக கூறப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு சமையல் எரிவாயுவின் விலை 40 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "யு.ஏ.இயில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது"
கருத்துரையிடுக