புதுடெல்லி,ஜன.13:2006 மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது நாங்கள்தாம் என ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து மஹாராஷ்ட்ரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலுக்கு எதிராக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.
ஆர்.ஆர்.பாட்டீலின் திறமையின்மையினால் ஏற்பட்ட தோல்விதான் பிரச்சனையை இவ்வளவு தூரத்திற்கு கொண்டு வந்ததாகவும், நந்தித்தில் நடந்த குண்டுவெடிப்பை முறையாக விசாரித்திருந்தால் மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்காது என மஹாராஷ்ட்ரா காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஹஸன் தல்வாயி தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச்செய்ய மத்திய அரசுக்கு சிபாரிசுச் செய்வோம் என ஆர்.ஆர்.பாட்டீல் கூறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் இக்கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாட்டீலுக்கு இத்துறையை முறையாக நடத்திச்செல்ல முடியுமென தோன்றவில்லை என தல்வாயி தெரிவித்தார். போலீசும், உள்துறை அமைச்சகமும் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதில் தோல்வியடைந்துவிட்டதாக தல்வாயி சுட்டிக்காட்டுகிறார்.
தற்பொழுது ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக பேசும் பாட்டீலின் வார்த்தைகளுக்கு ஒரு மதிப்பும் இல்லை. பர்பானி, ஜால்னா, பூர்னா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளை நடத்தியது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்பது மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸுக்கு தெரியும். ஆனால், ஏன் இதனைக் குறித்து விசாரிக்கவில்லை என தல்வாயி கேள்வி எழுப்புகிறார்.
முதல் மலேகான் குண்டுவெடிப்பில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்வதுக் குறித்து முதல்வர் பிருதிவிராஜ் சவானுடன் விவாதிப்பேன் என தல்வாயி தெரிவித்தார்.
இதற்கிடையே குண்டுவெடிப்பின் பெயரால் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரி பிரதமருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ நவாப் மாலிக் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் தொடர் விசாரணையின் பெயரால் காலத்தை விரயம் செய்யாமல் விரைவில் முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச்செய்ய வேண்டுமென இக்கடிதத்தில் நவாப் மாலிக் கோரியுள்ளார்.
இவ்வளவு விபரங்கள் வெளியான சூழலில் ஏன் முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்வதற்கு தாமதமாகிறது? என நவாப் மாலிக் கேள்வி எழுப்புகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "முதல் மலேகான்:முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் வாட ஆர்.பாட்டீலின் திறமையின்மைதான் காரணம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக