15 ஜன., 2011

ஏமனிலுள்ள அல்காய்தா போராளிகளே அமெரிக்காவின் தற்போதைய உடனடிக் கவலை : ஹிலாரி கிளின்டன்

சனா,ஜன.15:அல்காய்தா போராளிகள் ஏமனில் செயல்பட்டு வருவதே அமெரிக்காவின் தற்போதைய உடனடிக் கவலையென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

20 வருடங்களுக்குப் பின் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏமனுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது வருகையாக இதுவாகும்.

இராணுவ ரீதியான பங்களிப்புக்கு அப்பால் ஏமனுடன் விரிவான உறவுகளைத் தொடர அமெரிக்கா விரும்புவதாக இப்பயணத்தின் போது ஹிலாரி கூறியுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் உதவி ஏமன் எதிர்நோக்கும் சமூக பொருளாதார சவால்களையும் மையப்படுத்தியிருக்குமென அவர் கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டிலிருந்து ஏமனில் அமெரிக்காவுக்கு எதிரான அதிகளவான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2008 இல் தலைநகர் சனாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இரு தடவைகள் அல்காய்தா போராளிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானதுடன் கடந்த மாதமும் சானாவில் இடம்பெற்ற தாக்குதலிலருந்து சி.ஐ.ஏ. அதிகாரிகள் மயிரிழையில் உயிர்தப்பியிருந்தனர்.

இந்நிலையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சனாவை வந்தடைந்த ஹிலாரி கிளின்டன் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா சலேஹ்யை சந்தித்துள்ளார். ஜனாதிபதியுடனான பேச்சுகளின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹிலாரி; இன்று ஏமன் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் செற்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏமனைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்களில் சிலர் அமெரிக்கப் நபர்களாக உள்ளனர் என்பதைக் கூறுவதில் நான் கவலையடைகிறேன். எனவே இது இரு நாடுகளுக்கும் உடனடியாகக் கவலையை ஏற்படுத்தும் விஷயாமாகும்.

வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட காரணங்களால் உருவாகும் வன்முறைகள் தொடர்பிலும் அமெரிக்கா கவனம் செலுத்த விரும்புகிறது. இராணுவ ரீதியான உறவு மட்டும் போதுமானதன்று. விரிவான அடிப்படையில் பேச்சுகளை நடத்த விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

அல்காய்தா போராளிகளை ஒழிக்கும் முகமாக கடந்த இரு வருடங்களாக ஏமனுக்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிகள் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி:பி.பி.சி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "ஏமனிலுள்ள அல்காய்தா போராளிகளே அமெரிக்காவின் தற்போதைய உடனடிக் கவலை : ஹிலாரி கிளின்டன்"

MUKAVAI CITIZEN சொன்னது…

உலக பயங்கர வாதத்தின் தாயகம் அமெரிக்காவின் CIA வும் ஆக்கிரமிப்பு நாடாகிய இஸ்ரேலின் மொசாதும் ஆகும். இவர்களே உலக மக்களின் நிம்மதியை கெடுத்துக் கொண்டு இருகின்றன
ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும் ஒன்று தான். உலகப் பயங்கரவாதி அமெரிக்க பயங்கர வாதம் பற்றி பேசுகிறான் ... காலமே இதற்க்கு பதில் கூறும்

கருத்துரையிடுக