23 ஜன., 2011

அமெரிக்காவின் குண்டுவீச்சில் ஆப்கான் கிராமம் முற்றிலும் அழித்தொழிப்பு

லண்டன்,ஜன.23:காந்தஹார் மாகாணத்தில் அர்கந்தாத் நதியின் பள்ளத்தாக்கில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய குண்டுவீச்சில் ஒரு கிராமமே அழிந்து போனதாக செய்தி ஒன்று கூறுகிறது.

தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறித்தான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிரிட்டீஷ் பத்திரிகையான டெய்லி மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இக்கிராமத்திலிருந்து போராளிகளை விரட்டியடிக்க இரண்டு முறை நடந்த முயற்சிகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அக்கிராமத்தையே முற்றிலும் அழித்தொழிக்க அந்நிய ஆக்கிரமிப்பு கூட்டுப்படையின் கமாண்டர் லெஃப்டினண்ட் கர்னல் டேவிட் ஃப்ளின் மூளையில் உதித்த கொடூர எண்ணத்தினால் அந்த கிராமத்தையே அழித்தொழிக்க உத்தரவிட்டார்.

குண்டுவீச்சிற்கு முன்பும் பிறகும் எடுத்த புகைப்படங்களை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.

டரோக் கலோசே (Tarok Kolache) என்ற ஆப்கான் கிராமம்தான் அமெரிக்க வெறி ராணுவத்தின் அழித்தொழிப்புக்கு ஆளாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பிறரை அக்கிராமத்தின் பக்கம் அனுமதிக்காததால் எத்தனை சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. 25 டன் குண்டுகளை அமெரிக்க பயங்கரவாத ராணுவம் அக்கிராமத்தின் மீது வீசியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "அமெரிக்காவின் குண்டுவீச்சில் ஆப்கான் கிராமம் முற்றிலும் அழித்தொழிப்பு"

பெயரில்லா சொன்னது…

அமெரிக்கா அரக்கனின் கொடூரமுகத்தை மீண்டும் ஒரு முறை காட்டி உள்ளான் . ஜப்பானின் ஹிரோஷிமா , நாகசாகி அழிவை உலகம் மறந்து விட்டது.இராக்கில் நடத்திய பேரழிவுகளை உண்டாக்கும் வேதியல் குண்டு வெடிப்புகளையும் உலக நாடுகள் கண்டு கொள்ளவில்லை . அதனால் மீண்டும் ஒரு பேரழிவை ஆப்கானில் ஏற்ப்படுத்தலாம் என்று அமெரிக்க அரக்கன் நினைதுல்லான் போலும் . அதற்க்கான ஒரு சிறிய சோதனை ஹிரோஷிமா தான் இந்த ஆப்கான் கிராமம் போலும்.
உலக நாடுகள் விழித்துக் கொண்டு இனிமேலாவது பேரழிவை தடுக்குமா?

கருத்துரையிடுக