13 ஜன., 2011

பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கான கடைசி வாய்ப்பு: ஈரான்

டெஹ்ரான்,ஜன.13:ஈரானின் அணுசக்தித் தொடர்பாக அடுத்தவாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெறும் பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கான கடைசி வாய்ப்பு என ஈரான் அறிவித்துள்ளது.

அணுசக்தித் துறையில் வலிமையடைவதற்கான பணிகள் ஈரானில் நடந்துவருகிறது என ஈரானின் அணுசக்தித்துறை தூதர் அலி அஸ்கர் சுல்த்தானி தெரிவித்தார்.

வருகிற 21,22 ஆகிய தேதிகளில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஈரானுடன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜெர்மனி ஆகியன பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றன. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இனி நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என அலி அஸ்கரை மேற்கோள்காட்டி இர்னா செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஈரானில் ஆராய்ச்சி ரியாக்டருக்கு தேவையான எரிப்பொருளை ஈரானே தயாரித்துள்ளது. ஈரானுக்கு வெளியே யுரேனியத்தை அனுப்புவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைக்காது என அலி அஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் ரியாக்டருக்கு தேவையான எரிபொருளுக்கு பதிலாக யுரேனியத்தை ஈரான் அளிக்கவேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது ஈரான் சொந்தமாக எரிபொருளை தயாரிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கான கடைசி வாய்ப்பு: ஈரான்"

கருத்துரையிடுக