22 பிப்., 2011

யெமன் மக்கள் எழுச்சி 11- வது தினத்தில்

ஸன்ஆ,பிப்.22:நீண்டகாலமாக யெமன் நாட்டை ஆண்டுவரும் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் வீழ்ச்சி மட்டுமே தங்களது லட்சியம் என யெமன் நாட்டில் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்கள் மூலம் எங்களை புறமுதுகிட்டு ஓடச் செய்யவியலாது என அரசிற்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

எழுச்சிப் போராட்டம் 11-வது தினத்தை எட்டிய நேற்று யெமன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது.

தலைநகரான ஸன்ஆவில் அரசின் கைக் கூலிகளும்,ராணுவமும் கடுமையான தாக்குதலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். இப், தைஸ் ஆகிய நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே யெமனில் தெற்கு பகுதியான ஏடனில் அரசுக்கெதிரானவராக கருதப்படும் ஹஸன் பஹூம் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்றுவந்த அவரை கைது செய்து ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றதாக அவருடைய மகன் ஃபாதி ஹஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு விரோதமாக போராட்டம் நடத்த திட்டமிட்டார் எனக் குற்றஞ்சாட்டி கடந்த நவம்பர் மாதமும் பஹூம் யெமன் அரசால் கைது செய்யப்பட்டார்.

2013-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து விலகுவதாகவும், அடுத்த பதவிக்கு தனது மகனை நியமிக்கமாட்டேன் எனவும் ஸாலிஹ் தெரிவித்த பொழுதிலும் வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் அதிகரித்துவரும் சூழலில் அவருடைய வாக்குறுதியை ஏற்க மக்கள் மறுத்துவிட்டனர்.

நேற்று ஸன்ஆ பல்கலைக்கழகத்தின் மூவாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் நகரத்தில் நடத்திய பேரணியில் அரசு கைக் கூலிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். கடந்த சனிக்கிழமையும் அரசு கைக் கூலிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்குமிடையே நடந்த மோதலில் ஈராளமானோருக்கு காயமேற்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யெமன் மக்கள் எழுச்சி 11- வது தினத்தில்"

கருத்துரையிடுக