6 பிப்., 2011

துனீசியா:போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

துனீஸ்,பிப்.6:வடக்கு துனீசியாவில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர். 17 பேருக்கு காயமேற்பட்டுள்ளது.

மூத்த போலீஸ் அதிகாரியொருவர் ஒரு பெண்ணின் கன்னத்தில் தாக்கியதைத் தொடர்ந்து மோதல் வெடித்தது. கண்டனப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கியால் சுட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய எல் கெஃப் சிட்டியின் போலீஸ் தலைவரை கைதுச் செய்துள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இரண்டுபேர் போலீஸ் காவலில் மரணிக்கக் காரணமாகயிருந்த 4 போலீஸ் அதிகாரிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். போலீசார் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்து வருகிறது.

துனீசியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின்போது பலர் மரணிக்கக் காரணம் போலீசாரின் அராஜகம்தான் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆயிரக்கணக்கானோர் எல் கெஃப் சிட்டி போலீஸ் நிலையத்திற்கு முன்பு கூடினர். போலீஸ் நிலையம் மீது கல்வீச்சு நடந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கட்டிடத்திற்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நுழைய முயன்றபொழுது துப்பாக்கியால் சுட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துனீசியா:போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி"

கருத்துரையிடுக