அம்மான்,பிப்.6:அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கோரி ஜோர்டானிலும், யெமனிலும் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடைப்பெற்றன.
ஜோர்டானின் தலைநகரான அம்மானில் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரும், இடதுசாரி ஆதரவாளர்களும் இணைந்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணி எகிப்து தூதரகத்திற்கு சென்று நிறைவடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எகிப்து போராட்டத்தை ஆதரித்து கோஷங்களை எழுப்பினர்.
நாட்டில் குடிமக்களுக்கு பூரண சுதந்திரமும், அதிகாரத்தில் பங்களிப்பும் தேவை என பேரணிக்கு தலைமை வகித்த இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் பிரிவான இஸ்லாமிக் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் ஹம்ஸா மன்சூர் வலியுறுத்தினார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மக்களின் கொந்தளிப்பை தணிப்பதற்காக நேற்று முன்தினம் ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் இஃவானுல் முஸ்லிமீன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஜோர்டானிலும், யெமனிலும் தீவிரமடையும் போராட்டம்"
கருத்துரையிடுக