20 பிப்., 2011

விண்ணிற்கு 39-வது முறையாக பயணம் செய்யும் டிஸ்கவரி விண்கலம்

ப்ளோரிடா,பிப்.20:கால சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதால் டிஸ்கவரி விண்கலம் வருகிற வியாழன் அன்று விண்ணிற்கு செல்ல தயாராக உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த டிஸ்கவரி விண்கலத்தில் 6 உறுப்பினர்கள் கொண்ட குழு பயணிக்கிறது. இக்குழு 11 நாள் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான உதிரி பொருட்களை கொண்டு செல்கிறது.

கடந்த நவம்பர் மாதமே டிஸ்கவரி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலத்தின் வெளிப்பகுதி உருளைகளில் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து பயணம் நிறுத்தப்பட்டது. இந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதியன்று விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஸ்கவரி விண்கலம் 39 வது முறையாக விண்ணில் பயணிக்க உள்ளது. ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வியாழன் அன்று புறப்படுகிறது.

டிஸ்கவரி விண்கலத்தில் செல்ல இருந்த விண்வெளி வீரர் டிம்கோப்ரா சைக்கிள் விபத்தொன்றில் காயமடைந்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக விண்வெளி வீரர் ஸ்டீவ் போவன் விண்வெளி பயணத்தில் இடம் பெறுகிறார்.

எண்டோவர் விண்கலம் ஏப்ரல் 19 ம் திகதியும், அட்லாண்டா விண்கலம் கோடை காலத்திலும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விண்ணிற்கு 39-வது முறையாக பயணம் செய்யும் டிஸ்கவரி விண்கலம்"

கருத்துரையிடுக