நியூயார்க்,பிப்.14:ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உடனடியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என 'ஜி4' நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பில் இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் உறுப்பினராக உள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., சபை பாதுகாப்புக் கவுன்சில் விரிவாக்கம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புக் கவுன்சிலில் எப்படி மாற்றம் கொண்டு வரலாம் என்பது குறித்து, ஐ.நா., உறுப்பினர்களான 192 நாடுகளிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக ஜி4 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்தாலோசிக்கின்றனர்.
இதுத் தொடர்பாக ஜி4 நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் மற்றும் நிரந்தரமல்லாத உறுப்பினர்களை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பது குறித்து வலியுறுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.,வின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஆப்ரிக்காவையும் சேர்க்க வேண்டும் என ஜி4 நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

0 கருத்துகள்: on "பாதுகாப்பு கவுன்சிலை மாற்றி அமைக்க 'ஜி4' நாடுகள் வலியுறுத்தல்"
கருத்துரையிடுக