14 பிப்., 2011

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தும் 90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்​ட் எச்சரிக்கை

பிப்.14:இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியை பயன்படுத்துவோரின் கணணியிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP(SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008(R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

இருந்த போதிலும் நெருப்பு நரி(பயர்பாக்ஸ்), கூகுள் க்ரோம் மற்றும் சபாரி போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தும் 90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்​ட் எச்சரிக்கை"

கருத்துரையிடுக