5 பிப்., 2011

முபாரக் உடனடியாக பதவி விலக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கோரிக்கை

பாரிஸ்,பிப்.5:எகிப்து வரலாற்றிலேயே மிகப் பிரம்மாண்டமான மக்கள் திரள் போராட்டத்திற்கு சாட்சியம் வகித்த பிறகும் தொடர்ந்து பதவியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஹுஸ்னி முபாரக்கிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியநாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பதவியை ராஜினாமாச் செய்ய வருகிற செப்டம்பர் மாதம்வரை காத்திருக்காமல் உடனடியாக அதிகாரப் பரிமாற்றம் செய்ய தயாராகுமாறு அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் கோரிக்கை விடுத்துள்ளன.

வியாழக்கிழமை பாரிஸில் கூடிய பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய பிரபல நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் நடந்துவரும் சம்பவங்களை கவலையுடன் உற்று நோக்குவதாகவும், சுதந்திரமும், அடிப்படை உரிமைகளும் பாதுகாத்திட எகிப்திய மக்களை அனுமதிக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளன.

அதிகார மாற்றத்தை உடனடியாக ஆரம்பிக்க வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கேட்ஸ் எகிப்தின் துணை அதிபர் உமர் சுலைமானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முபாரக் உடனடியாக பதவி விலக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கோரிக்கை"

கருத்துரையிடுக