5 பிப்., 2011

ஜித்தா வெள்ளம்:ஆபத்தின் விளிம்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஜுல்ஃபிகர்

துபை.பிப்:ஃபர்ஸ்ட் அமெரிக்கன் ப்ராண்ட் கம்பெனியில் பிராந்திய நிர்வாகியாக பணி புரியும் ஜுல்ஃபிகர் ஹுசைன் கடந்த மாதம் பணிநிமித்தமாக ஜித்தா சென்றிருந்தார். ஜனவரி 26 அன்று அவருடைய ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் கடும் மழை பெய்து பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி அவரது கார் 400 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

"பல கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன, ஆனால் என்னுடைய டிரைவர் 3 கி.மீ தொலைவில் உள்ள ஹோட்டலுக்கு 15 நிமிடத்திற்குள் எவ்வித தடங்கலும் இன்றி சென்றுவிடலாம் என்றார். ஆனால் அது பகல் கனவாகி, திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400 மீட்டர் தொலைவு இழுத்துச் செல்லப்பட்டது.

நாம் நிச்சயம் இறந்து விடுவோம் என்று எண்ணி இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தோம். எங்கள் பிரார்த்தனையை இறைவன் ஏற்றிருக்க கூடும், இறந்துவிட்டோம் என்று எண்ணிய சமயத்தில் எங்கள் கார் ஒரு மரத்திற்கும் சுவருக்கும் இடையில் சிக்கி நின்றுவிட்டது. இப்போது நாம் பத்திரமாக இருக்கிறோம் என்று நினைத்து கொண்டிருக்கையில் காருக்குள் தண்ணீர் புகுந்து முழங்கால் வரை ஏறியது. டிரைவர் லாவகமாக ஜன்னல்களை இறக்கியதால் நாங்கள் காரின் மேல்பகுதிக்கு ஏறிக்கொண்டோம்.

ஆனால் அங்கு கண்ட காட்சிகள் சாதாரணமானது அல்ல. கார்களும் கனரக வாகனங்களும் பிளாஸ்டிக்கினால் ஆனது போல் மிதந்து கொண்டிருந்தது. கனமழை பெய்து கொண்டிருந்தது. மூழ்கி இறக்காமல் குளிரால் இறந்துவிடுவோம் என்று நினைத்தேன். நிறைய போலீஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் சென்றன. ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை. நான் போலீஸுக்கு அழைத்தபோது உங்களுக்காக பிரார்த்தனை தான் எங்களால் செய்யமுடியும் என்று சொன்னார்கள். எனக்கு வெறுப்பேற்பட்டது. துபை
போலீஸாக இருந்தால் 1மணி நேரத்திற்குள் காப்பாற்றியிருக்கும்.

இரவு வந்தது. கடும் பசியும் பயமும் என்னை பீடித்துக் கொண்டது. என்னுடைய நண்பர்கள், குடும்பத்தார்கள், இந்தியப் பிரதிநிதி என எல்லோரும் போனில் பேசினார்கள் ஆனால் மீட்க இயலவில்லை. இறுதியாக விடிந்தது, தண்ணீர் சற்று குறைந்திருந்தது, பத்திரமாக இறங்கி அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றேன். 18 மணி நேரம் கழித்து எனக்கு ஏற்பட்ட சோதனை முடிவுக்கு வந்தது." காலையில் ஒரு க்ராசைண்டும் ஆம்லெட்டும் சாப்பிட்டது தான் இதுவரை
உண்ட உணவுகளிலேயே சிறந்தது என்று கூறுகிறார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜித்தா வெள்ளம்:ஆபத்தின் விளிம்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஜுல்ஃபிகர்"

கருத்துரையிடுக