3 பிப்., 2011

பில்லி சூனிய பயம்: எடியூரப்பாவின் நிர்வாண தூக்கம்

பெங்களூரு,பிப்.3:கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தன்னை பில்லி சூனியம் வைத்து எதிர்க் கட்சிகள் கொல்ல முயற்சிப்பதாக புகார் கூறி இருந்தார். பில்லி சூனியத்தால்தான் தனக்கு அடிக்கடி தொல்லைகள் ஏற்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கர்நாடக சட்டசபை கட்டிட வளாகத்தில் கோழித்தலை மற்றும் பூஜை பொருட்கள் கிடந்தன. எதிர்க்கட்சிகள் தனக்கு எதிராக பூஜை நடத்தி இருக்கிறார்கள் என்று கருதினார். அதில் இருந்தே அவர் மிகவும் பயந்த நிலையில் உள்ளார். எனவே பில்லிசூனியத்தை எதிர்கொள்ள பல்வேறு பரிகார பூஜைகளை செய்து கொண்டிருக்கிறார்.

கேரளாவில் பத்ரகாளியம்மன் கோவிலில் கழுதையை பலியிட்டு '௦சத்ரு சம்ஹார பூஜை' செய்தார். காளகஸ்தி கோவிலுக்கு சென்று ராகு-கேது பூஜை செய்தார். நேற்று முன்தினம் மைசூர் சென்று பூஜை செய்தார். பில்லி சூனியத்தில் இருந்து தப்ப, எடியூரப்பா மேலும் சில பரிகார பூஜைகளை செய்ய வேண்டும் என்று அவருடைய ஆன்மீக ஆலோசகர் பானுபிரகாஷ் சர்மா யோசனை கூறியுள்ளார்.

அதில் அமாவாசைகளை ஒட்டி 3 நாட்கள் வெறும் தரையில் நிர்வாணமாக படுத்து தூங்க வேண்டும். காலையில் ஆற்றில் நிர்வாணமாக நின்றபடி 12 முறை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறாராம். இதனால் எடியூரப்பா இரவில் நிர்வாணமாக படுத்து தூங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்ததாக ஆற்றில் நிர்வாணமாக நின்று சூரிய நமஸ்காரம் செய்து பூஜை நடத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது. எடியூரப்பா சொந்த தொகுதியான ஷிகாரிபுரா தொகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து பல்வேறு பரிகார பூஜைகள் செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 கருத்துகள்: on "பில்லி சூனிய பயம்: எடியூரப்பாவின் நிர்வாண தூக்கம்"

sultangulam@blogspot.com சொன்னது…

சினிமாவில் வருவது போல அம்மணமாக கையில் விளக்கேந்திக் கொண்டு ஊர் முழுவதும் சுற்றி வருவதுதான் கடைசியான பரிகாரமாக இருக்கப் போகிறது. :)) LOL

பெயரில்லா சொன்னது…

U r Right Mr.Sulthan.. lets Wait and see..

A.ABDUL AZIZ, PETTAVAITHALAI. சொன்னது…

MANITHARGALIN(MUSLIMGAL) THALAIKKU VILAI NIRNAYIKKUM IVAN KOLI THALAIKKU BAYAM AND PARIGARAM.

கருத்துரையிடுக