7 பிப்., 2011

அரபு-முஸ்லி​ம் உலகில் மாற்றத்திற்​கான காற்று வீசுகிறது -​ பாப்புலர் ஃப்ரண்ட்

பெங்களூர்,பிப்.7:அரபு-முஸ்லிம் உலகில் மாற்றத்திற்கான எழுச்சி தவிர்க்க முடியாதது என பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் ஏற்பட்டுள்ள வெகுஜன எழுச்சியை நவீன காலனி ஆதிக்க-சியோனிஷ சக்திகள் அபகரித்துவிடுமோ என்ற கவலையையும் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளிப்படுத்தினார்.

துனீசியாவில் வெகுஜன மக்களின் சக்தி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கெதிராக போராட்டம் நடந்துவருகிறது.

யெமனிலும், ஜோர்டானிலும் அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. ஜனநாயகம், சுதந்திரம், நீதி ஆகியவற்றிற்கான மக்களின் பேரார்வத்தை நவீன காலனியாதிக்கத்தின் கைப்பாவைகளான இந்நாடுகளின் ஆட்சியாளர்கள் நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கி வருகின்றனர்.

மக்களின் அடிப்படை தேவைகளும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. ஜனநாயக ஆட்சியை நோக்கி நகர்வதற்கான எந்தவொரு முயற்சியும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ஆதரவோடு அடக்கி ஒடுக்கப்படுகிறது.

எகிப்திலும், அயல்நாடுகளிலும் சமூக மற்றும் அரசியலில் ஈடுபடும் இஸ்லாமிய இயக்கங்கள் குறி வைக்கப்படுகின்றன. அவர்கள் தேர்தலில் பங்கேற்பது தடைச் செய்யப்பட்டது. எகிப்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி இஸ்லாத்தின் மதிப்பீடுகள் முஸ்லிம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதை எடுத்துக்காட்டுகின்றன.

எகிப்தில் நடந்துவரும் சம்பவங்களை கருத்தில்கொண்டு அரபு முஸ்லிம் உலகின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் மனித உரிமைகளை புனரமைக்க வழிவகுக்க வேண்டும்.

ஹுஸ்னி முபாரக்கை பாதுகாக்க முடியாததால் அமெரிக்காவும், இஸ்ரேலும் உமர் சுலைமான் போன்ற தங்களது விசுவாசமிக்க சேவகர்களை அதிகாரத்தில் அமர்த்துவதற்கு முயல்கின்றன. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தையும், இதர ஜனநாயக சக்திகளையும் அகற்றுவதுதான் அவர்களது லட்சியம்.

எகிப்தில் ஜனநாயகம் பாதுகாப்பான முறையில் மீட்பதற்கான நடவடிக்கையில் இந்திய அரசு செயலூக்கமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அரபு-முஸ்லி​ம் உலகில் மாற்றத்திற்​கான காற்று வீசுகிறது -​ பாப்புலர் ஃப்ரண்ட்"

கருத்துரையிடுக