டெல்லி,பிப்.6:மாஸ்கோவில், ரஷ்யப் பெண்ணுடன் முறைகேடான உறவு வைத்திருந்த இந்திய கடற்படை மூத்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற பழைய போர்க் கப்பலை இந்தியா வாங்கியுள்ளது. தற்போது அதை மறு சீரமைத்து கட்டும் பணி மாஸ்கோவில் நடந்து வருகிறது. இந்தப் பணியை மேற்பார்வையிடுவதற்காக கமோடர் சுக்ஜீந்தர் சிங் என்ற கடற்படை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 2005 முதல் 2007 வரை அப்பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில், அவர் ரஷ்யப் பெண் ஒருவருடன் ரகசிய தொடர்பு ஏற்பட்டு அவருடனான தவறான உறவையும் வளர்த்துக் கொண்டார். இதுகுறித்த விவரம் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. அந்தப் பெண்ணுடன், சிங் அந்தரங்க கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பதவியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார். உடனடியாக அவரது பதவி முறிவு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னும் 2 ஆண்டு பணிக்காலம் சிங்குக்கு உள்ளது. அவர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும், பொறுப்புகளிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும்
அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: on "ரஷ்யப் பெண்ணுடன் தவறான உறவு: இந்திய கடற்படை அதிகாரி சஸ்பெண்ட்"
கருத்துரையிடுக