4 மார்., 2011

25 பைசாவுக்கு பை! பை! செல்லாது!

டெல்லி,மார்ச்.4:நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி முதல் 25.காசு நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

ஒரு காலத்தில் ஒரு காசு, 2 காசு, 5 காசு, 10 காசு என்று நாணயங்கள் இருந்தன. அவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டனர். இவற்றை இப்போதெல்லாம் காணவே முடிவதில்லை. தற்போது 25 காசு, 50 காசு ஆகியவை மட்டும் புழக்கத்தில் உள்ளன. இதில் 25 காசு நாணயத்தையும் புழக்கத்திலிருந்து நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி ஜூன் 30ம் தேதியுடன் 25 காசு நாணயத்தை நிறுத்தவுள்ளனர். அதற்குப் பிறகு இந்த காசு செல்லாததாக அறிவிக்கப்படும். அதன் பிறகு இதை எங்கும் பயன்படுத்த முடியாது.

எனவே அதற்குள் 25 காசுகளை வைத்துள்ளவர்கள் அவற்றை வங்கிகளில் மொத்தமாக கொடுத்தால் அதற்கு நிகரான தொகையை வங்கிகள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஒருவரிடம் ஒரே ஒரு 25 காசு மட்டும் இருந்து, அதை மாற்றிக் கொள்ள விரும்பினால், அதற்கு ஈடாக என்ன தொகை தருவார்கள்?

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "25 பைசாவுக்கு பை! பை! செல்லாது!"

மாஷ் சொன்னது…

இப்படி நான்கு பேர் 25 பைசா மட்டும் வைத்திருந்தால் வங்கிக்காரர்கள் நான்கு பேருக்கும் சேர்த்து ஒரு ரூபாய் கொடுத்து கடலை மிட்டாய் வாங்கித் திங்கச் சொல்வார்கள். (ஒரு ரூபாய்க்கு ஊரில் கடலை மிட்டாய் கிடைக்கிறதா என்று உறுதிப்படுத்த வேண்டும்.)

நான்கு பேரும் ஒரு கடலை மிட்டாய் வாங்கி ஆளுக்குக் கொஞ்சம் கடிப்பார்கள். கடி கொஞ்சம் முன்னே பின்னே ஆகும் பட்சத்தில் அடுத்த கடிகள் பரஸ்பரம் உடம்பிலும் விழும். அந்தக் கடிகள் இறுதியில் ஒன்றிரண்டு கொலைகளில் முடியலாம்.

வாழ்க இந்தியா! வளர்க அதன் விலைவாசி!!

Unknown சொன்னது…

Mash comments made me laugh!

கருத்துரையிடுக